உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  கோட்டையா மாத்தியிருக்காரு!

 கோட்டையா மாத்தியிருக்காரு!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளராக, ஜெயராமன், மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் பிரச்சாரத்துக்கு வந்த அவருக்கு, கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரிடம், தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்து, நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'உள்ளூரில் விலை போகாமல் வெளியூருக்கு வந்துள்ள செந்தில் பாலாஜியின் சாயம், ஓட்டு எண்ணிக்கையில் வெளுத்து போகும். கரூரில் நின்றால், 'டிபாசிட்' காலியாகி விடும் என்று இங்கு வந்து நிற்கிறார். ஆனால், இங்கு, அதை விட மோசமாக இருக்கும்... இனி எந்த காலத்திலும், அவர் வெற்றி பெற முடியாது' என்றார். இதை கேட்ட தொண்டர் ஒருவர், 'நம்ம அண்ணன் மட்டும் தான், 2001ல் இருந்து இங்க போட்டியிட்டு, பொள்ளாச்சியை, அ.தி.மு.க., கோட்டையா மாத்தி வச்சிருக்காரு...' என கூற, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஏப் 06, 2026 09:37

பிரபலமான ‘பொள்ளாச்சி பாலியல் ‘ வழக்கு மூடிவிட்ட தெம்பில்தான் கொக்கரிக்கிறார் மக்கள் அவ்வளவு விரைவில் மறப்பார்களா? பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் குமுறல் சும்மா விடுமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை