உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / பிழைக்க தெரிந்தவர்தான்!

பிழைக்க தெரிந்தவர்தான்!

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், மாதாந்திரவிவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த விவசாயிகள்,விவசாய சங்க நிர்வாகிகள், பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினர்.சில புகார்கள் குறித்து விவசாயிகள் பேசுகையில், துறை சார்ந்த அதிகாரிகள் பதில் அளித்தனர். அதில் திருப்தியடையாத விவசாயிகள், தொடர்ந்து தங்கள் கருத்துகளை வலியுறுத்திப் பேசியபோது, இரு தரப்பினர்இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.சில சிக்கலான பிரச்னைகள் குறித்து விவசாயிகள் பேசியபோது, அதை அப்படியே தவிர்த்து விட்டு, கலெக்டர் அடுத்த விஷயத்துக்கு தாவி விட்டார்.இதை கவனித்த சில விவசாயிகள், 'கலெக்டர்சிறிய விஷயங்களுக்கு மட்டும் பதில் அளித்துவிட்டு, சீரியசான விஷயங்களை கண்டுக்காம கடந்து போயிட்டாரே... பிழைக்கத் தெரிந்தவர்தான்' என, புலம்பியபடியே நடையைக் கட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Gajageswari
நவ 11, 2024 05:47

விவசாயம் சம்பந்தப்பட்ட குறைகள் கூறினாள் ஏற்று கொள்ளலாம். டோல் கேட், தெரு விளக்கு, உள்ளுர் பங்காளி சண்டை


Anantharaman Srinivasan
நவ 08, 2024 23:01

கலெக்டர் தன் சீட்டுக்கு பங்கம் வராமல் காப்பாற்றி கொண்டு விட்டார்.


Dharmavaan
நவ 08, 2024 10:21

எதற்கு இந்த கண்துடைப்பு கூட்டம் ஏமாற்ற


D.Ambujavalli
நவ 08, 2024 05:14

தங்கள் அதிகாரிகளைக் காட்டிக்கொடுப்பாரா? அவர்கள் எத்தனை வழிகளில் 'உபகாரம்' செய்கிறார்களோ ?


புதிய வீடியோ