வாசகர்கள் கருத்துகள் ( 1 )
முதல்வர், துணை முதல்வர் மட்டும்தான் விளம்பரப்பிரியர்களாக இருக்க வேண்டுமா? சுற்றுப்பட்டு தேவதைகளும் அவ்வழியில்தானே செல்வார்கள் ?
திருப்பூரில், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் தெற்கு தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., செல்வராஜ் ஆகியோர் இரு துருவங்களாக உள்ளனர். சமீபத்தில் சில இடங்களில் பெய்த மழையால், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மேயர் தினேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் அப்பகுதிகளுக்கு சென்று, நிவாரண பணிகளை மேற்கொண்டனர்.இந்நிலையில், அடுத்த நாள் காலை, 'நிவாரண பணிகள் முறையாக நடக்கவில்லை' எனக்கூறி, அப்பகுதி மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். உடனே, செல்வராஜ் எம்.எல்.ஏ., அங்கு சென்று அவர்களை சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரண பணிகளை மேற்கொண்டார்.இதை பார்த்த கட்சி நிர்வாகி ஒருவர், 'மழை பாதிப்பு நிவாரண பணிக்கு கூட மேயரும், எம்.எல்.ஏ.,வும் சேர்ந்து வராம, இப்படி தனி ஆவர்த்தனம் பண்ணலாமா...' என முணுமுணுக்க, மற்றொருவர், 'அதானே... சின்னவர் உதயநிதிக்கு தெரிஞ்சா, ரெண்டு பேரின் கச்சேரியையும் காலி பண்ணிடுவார்' என, சிரித்தபடியே அங்கிருந்து நகர்ந்தார்.
முதல்வர், துணை முதல்வர் மட்டும்தான் விளம்பரப்பிரியர்களாக இருக்க வேண்டுமா? சுற்றுப்பட்டு தேவதைகளும் அவ்வழியில்தானே செல்வார்கள் ?