உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  கேள்விக்கே பயப்படுறாரே!

 கேள்விக்கே பயப்படுறாரே!

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், மதுரையில், சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், 'தி.மு.க., கூட்டணியில் இருக்கும் காங்., கட்சி, தைரியமாக ஆட்சியில் பங்கு கேட்கிறது. அதுபோல உங்கள் கூட்டணியில், நீங்களும் அ.தி.மு.க.,விடம் ஆட்சியில் பங்கு கேட்பீர்களா?' என்று ஒரு நிருபர் கேட்டார். அதற்கு நயினார் நாகேந்திரன், 'காங்., செய்வதை நாங்களும் செய்ய வேண்டும் என, எதிர்பார்க்கக் கூடாது. அவர்கள் கேட்கின்றனர். நாங்கள் தே.ஜ., கூட்டணியில் இருக்கிறோம். எங்கள் இலக்கு, தி.மு.க., ஆட்சியை அகற்றுவதுதான்' என்றபடியே, மேலும் கேள்விகள் எழுவதை தவிர்க்க நினைத்து, பேட்டியை முடித்து கொண்டு கிளம்பினார். இதைப் பார்த்த மூத்த நிருபர் ஒருவர், 'ஆட்சியில் பங்கு கேட்பீங்களா என்ற கேள்விக்கே பயப்படுறவர், எப்படி ஆட்சியில பங்கு கேட்பார்...' என, முணுமுணுக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஜன 24, 2026 06:36

எதை சாக்காக வைத்து கழற்றிவிடுவாரோ என்று அதிமுகவுடன் ஒட்டிக்கொண்டிருக்கையில் இப்படிப்பட்ட வில்லங்கமான கேள்விகளுக்கெல்லாம் பதிலளிப்பாரா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை