வாசகர்கள் கருத்துகள் ( 3 )
எந்த போராட்டத்தையும் ஒரே நாளில் முடித்ததாக கம்யூனிட் வரலாற்றில் கிடையாது.
இது தான் CPM&CPI நிலை..புரிந்துகொள்ளவும்.
எல்லாம் கட்டிங் பண்ணுற வேலை அண்ணே
மேகமலை புலிகள் காப்பக பகுதிக்குள் வசிக்கும் கிராம மக்களை வெளியேற்றும், தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், தேனி கலெக்டர் அலுவலகம் முன் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மா.கம்யூ., கட்சியின் தமிழக செயலர் சண்முகம், தேனி தி.மு.க., - எம்.பி., தங்க.தமிழ்செல்வன் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த சிலர், 'உயர் அதிகாரிகள் இங்கு வந்து பேச வேண்டும்' என கோஷமிட்டனர். இதனால் கோபமடைந்த சண்முகம், 'சும்மா இருய்யா... பேசிட்டு இருக்கேன்ல... இங்க வந்த 10,000 பேரும் போய் கலெக்டரை பார்க்க முடியுமா...? கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் தொடர்ந்து போராடுவோம்' என, கோஷமிட்டவர்களை அமைதிப்படுத்தினார். இதை பார்த்த ஒருவர், 'த.வெ.க., அரசுக்கு இவங்க ஆதரவு அளிக்கும் நிலையில், அரசு அதிகாரிகளுக்கு எதிரா எப்படி குரல் கொடுப்பார்?' என, முணுமுணுத்தபடியே அங்கிருந்து நகர்ந்தார்.
எந்த போராட்டத்தையும் ஒரே நாளில் முடித்ததாக கம்யூனிட் வரலாற்றில் கிடையாது.
இது தான் CPM&CPI நிலை..புரிந்துகொள்ளவும்.
எல்லாம் கட்டிங் பண்ணுற வேலை அண்ணே