உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  பதவியை விட்டு தரலையே!

 பதவியை விட்டு தரலையே!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி மேயராக காங்., கட்சியின் சரவணனும், துணை மேயராக தி.மு.க.,வின் தமிழழகனும் உள்ளனர். சமீபத்தில் நடந்த கவுன்சில் கூட்டத்தில், மேயருக்கு அருகில் இருந்த துணை மேயர் இருக்கையில் அமராத தமிழழகன், சக கவுன்சிலர்களுடன் கீழே அமர்ந்திருந்தார். மேயர் சரவணன், தமிழழகனை மேடைக்கு அழைத்தபோது, 'தேர்தலில், மக்களால் நாங்கள் புறக்கணிக்கப்பட்டு விட்டோம். இந்த புறக்கணிப்பை வெளிப்படுத்தும் விதமாக, அரசு காரை பயன்படுத்துவதில்லை என முடிவெடுத்து அதை திருப்பி கொடுத்து விட்டேன். அதேபோல், துணை மேயருக்கான இருக்கையிலும் அமர மாட்டேன்' என கூறிவிட்டார். இதை கேட்ட நிருபர் ஒருவர், 'சீட்டையும், காரையும் திருப்பி குடுத்தா மட்டும் போதுமா...? துணை மேயர் பதவியையும் ராஜினாமா பண்ணிட்டா இவரை பாராட்டலாம்...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sankaranarayanan
ஜூலை 07, 2026 22:41

உட்காரும் ஸீட்டையும், செல்லுகின்ற காரையும் விட்டுவிட்டால் போதுமா தலைவரே நீங்கள் வகிக்கும் பதவியையும் ராஜினாமா செய்தால் நீங்கள் உத்தம புத்திரர் ஆவீர் இல்லையேல் இதெல்லாமே அரசியல் நாடகம்தான் தோற்றுப்போன திமுக நண்பர் அன்பழகன் சொல்லி செய்யாதீர்கள் அவருக்கு செல்வாக்கும் பணமும் ஏராளம் சில நாட்களுக்கு செல்லும் பிறகு அடிபட்டு பழைய நிலைமைக்கு திரும்பிவிடும்


D.Ambujavalli
ஜூலை 07, 2026 19:15

மேலே. என்ன , கீழே. என்ன? 'வாங்குவதில், சேர்ப்பதில்'. எதையும். விட்டுக்கொடுக்க. மாட்டார்களே.


Lakshminarasimhan
ஜூலை 07, 2026 09:49

விசில் சின்னத்துக்கு வோட்டு கேட்பார்கள்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை