உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  இருந்தா த.வெ.க., அள்ளியிருக்கும்!

 இருந்தா த.வெ.க., அள்ளியிருக்கும்!

புதிய தமிழகம் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம், சென்னையில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் சமீபத்தில் நடந்தது. பின், கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், 'தமிழகத்தில் ஒற்றை கட்சி ஆட்சி என்பது, எழுதப்படாத விதியாக இருந்தது. ஆனால் முதல்வர் விஜய், ஆட்சியில் மற்ற கட்சிகளுக்கு பங்கு அளித்துள்ளார். அதற்காக அவருக்கு வாழ்த்துகள். 'பெரும்பாலான அமைச்சர்கள் புதியவர்களாக உள்ளனர். இதனால், பல்வேறு துறைகளில் இடைவெளியும், சுணக்கமும் உள்ளது; இது, சரி செய்யப்பட வேண்டும். கட்சி தாவல் செயல்பாடுகளை விஜய் ஊக்குவிக்க கூடாது. ஒரு கட்சியையோ அல்லது கூட்டணியையோ உடைத்து, ஆட்சியை காப்பாற்றி கொள்வதில் எங்களுக்கு உடன் பாடு இல்லை' என்றார். இதை கேட்ட ஒரு நிருபர், 'நல்லவேளை... இவர் கட்சியில, எம்.எல்.ஏ.,க்கள் யாருமில்லை... இருந்தா, அவங்களையும் த.வெ.க., தரப்பு அள்ளியிருக்கும்' எனக்கூற, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஜூன் 05, 2026 07:20

இவர்கட்சியில், சோபா. அனுப்பி. இணைத்துக்கொள்ளுமளவு. எம். எல். ஏ. எண்ணிக்கை. என்றும். வராது எனவே. கட்சித்தாவுபவர்களைப். பற்றி கமெண்ட். அடிக்கிறார் காலம். சென்ற. ‘சோ. ஓரு பழமொழி. சொல்வார், அதுதான் வருகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை