உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / அடித்தால் வேலை போயிடும்!

அடித்தால் வேலை போயிடும்!

திருப்பூர், கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப் பள்ளியின் நுாற்றாண்டு விழா நடந்தது.இதில், இப்பள்ளியின் முன்னாள் மாணவரும், இந்திய கம்யூ., கட்சியின் தற்போதைய திருப்பூர் எம்.பி.,யுமான சுப்பராயன் பேசுகையில், 'பள்ளி நுாற்றாண்டு விழா அழைப்பிதழை படித்தபோது, என் ஆழ்மனதில் நினைவுகள் நிழலாடத் துவங்கின. நான், 1964 முதல் 1967 வரை இப்பள்ளியில் படித்தேன். 'மாணவராக இருந்துவிட்டால், பள்ளி பருவம் கவலையற்ற பருவம். எந்தவிதமான சிக்கலும், நெருக்கடியும் இல்லாத பருவம். எந்த கவலையும் நெஞ்சில் அண்டாது. அதே நேரம், குறும்பு செய்த மாணவர்களை, கணக்கு வாத்தியார் கிள்ளியதை இன்று நினைத்தாலும் பயமாக உள்ளது' என்றார்.இதைக் கேட்ட ஆசிரியர் ஒருவர், 'அதெல்லாம் அந்த காலம்... இன்று மாணவர்களை தொடக்கூட முடியாது; மீறி அடித்தால், எங்கள் வேலை போய் விடும்...' என, 'கமென்ட்' அடிக்க, சக ஆசிரியர்கள் ஆமோதித்து சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

கண்ணன்
ஏப் 08, 2025 12:31

ஆக இவரின் படிப்பு வெறும் மூன்றாம் வகுப்புதான்- இவரையும் போய் மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்த மக்களை என்னவென்பது?


D.Ambujavalli
ஏப் 08, 2025 06:32

காதைத் திருகுதல், கிள்ளுதல் கிடக்க எங்கள் கணக்கு டீச்சர் தான் கைவைக்கவே மாட்டார். கை முட்டியை மடக்கிக்கொண்டு டெஸ்க் மீது பலமாகக் குட்டச் செய்வார் பேசாமல் அடித்து, கிள்ளி இருக்கலாமே என்னுமளவு வலிக்கும் Spare The rod spoil the child என்பது போல் இன்று கண்டிப்பில்லாத மாணவர்கள் உருப்படுவதும் குறைகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை