உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / தன் அணிக்கு அழைக்கிறாரோ?

தன் அணிக்கு அழைக்கிறாரோ?

தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்த, அ.தி.மு.க.,முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை பலரும் சந்தித்து, ஆதரவு தெரிவித்து வருகின்றனர். செங்கோட்டையனை, அவரது கோபிச்செட்டிபாளையம் வீட்டில், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த பெங்களூரு புகழேந்தி சந்தித்து, நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். பின், வெளியில் வந்த புகழேந்தி அளித்த பேட்டியில், 'செங்கோட்டையன் பதவியை பறித்து, தான்தோன்றித்தனமாக பழனிசாமி முடிவெடுத்துள்ளார். இனியும் செங்கோட்டையன் வேடிக்கை பார்க்கக் கூடாது. எங்களுடன் கைகோர்க்க வேண்டும். அவர் வெகுண்டெழுந்தால் அரசியலில் பூகம்பம் வெடிக்கும்; பழனிசாமியின் அரசியலை முடித்து விடுவோம்...' என்றார். மூத்த நிருபர் ஒருவர், 'புகழேந்தியின் அழைப்பை பார்த்தால், தன் தலைமையில இயங்கும் ஒருங்கிணைப்பு குழுவுக்கு செங்கோட்டையனை கூப்பிடுறாரோ...' என முணுமுணுக்க, 'இருந்தாலும் இருக்கும்...' என்றபடியே, சக நிருபர்கள் நடையை கட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ