உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / ஐ.ஏ.எஸ்., அதிகாரின்னா சும்மாவா?

ஐ.ஏ.எஸ்., அதிகாரின்னா சும்மாவா?

சென்னை மாநகராட்சி பணிகள் துறை துணை கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, தென்சென்னை மற்றும்மத்திய சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வெள்ளத் தடுப்பு பணிகள், புதிய குளங்கள் அமைக்கும்பணிகள் குறித்து வளசரவாக்கம், அரும்பாக்கம், கிண்டிரேஸ் கிளப் போன்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.ஐந்து இடங்களில் அவர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், தனியாகவும், குழுவாகவும் என, 'டிவி' நிருபர்கள், 10க்கும் மேற்பட்ட முறை பேட்டி எடுத்தனர். நிருபர்கள் கேட்ட அடுக்கடுக்கான கேள்விகளுக்கு எந்த தடுமாற்றமும் இன்றி, துணை கமிஷனர் தெளிவான பதில்களை கொடுத்தார்.இதைப் பார்த்த இளம் நிருபர் ஒருவர், 'எல்லா நிருபர்களையும் சூப்பரா சமாளிக்கிறாரே...' என, புருவத்தை உயர்த்த, மூத்த நிருபர் ஒருவர், 'ஐ.ஏ.எஸ்., அதிகாரின்னாசும்மாவா...' என்றபடியே, நடையை கட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anantharaman Srinivasan
டிச 12, 2024 13:52

கமிஷ்னர் மட்டுமல்ல எந்த அரசு அதிகாரியாயிருந்தாலும் finger tips ல் விவரங்களை வைத்திருந்தால் தான் சரியான பதிலைதர முடியும். இல்லையேல் திணற வேண்டியது தான்.


Barakat Ali
டிச 12, 2024 08:21

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தரப்படும் பயிற்சியில் தொடங்கி கடினமான பணிச்சூழல் வரை அனைத்துமே இதற்குக் காரணம் .... அரசியல்வாதிகளுக்குத்தான் கல்வித்தகுதி, திறமைத்தகுதி என்று எந்த நியமங்களும் இல்லை ..... மக்கள் பிரதிநிதிகளுக்கும் வாழ்க்கையில் உருப்படியாக மக்களுக்கு ஏதாவது ஒரு செயலாவது செய்ய பயிற்சி தேவை ...


D.Ambujavalli
டிச 12, 2024 05:58

அரசு அதிகாரியானாலும், வேளையிலும், விவரங்களிலும் தயார் நிலையில் இருந்தால் மீடியாவை சமாளிக்கும் தன்னம்பிக்கை இருக்கும் நிருபர்களைக் கண்டாலே ஓடி ஒலிக்கிறார்கள் என்றால் தங்கள் ஊழல் வெளிப்படும் கேள்விகள் வந்துவிடுமோ என்ற பதட்டம்தான் காரணம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை