உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / காமராஜர் மறுக்கவா போறாரு?

காமராஜர் மறுக்கவா போறாரு?

சென்னை, பெரம்பூரில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில், தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., சிவா பங்கேற்றார்.அவர் பேசுகையில், 'எமர்ஜென்சி என்ற அவசர கால சட்டம் அமலில் இருந்த நேரத்தில், காமராஜர் திருப்பதிக்கு செல்ல வேண்டியிருந்தது. அப்போது, தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, 'நீங்கள் அங்கு செல்லக்கூடாது' என, காமராஜரிடம் கூறினார்.'காமராஜரோ, 'நான் திராவிடக்காரனல்ல; காங்கிரஸ்காரன்' என்றார். அதற்கு கருணாநிதி, 'உங்களை கைது செய்ய மத்திய அரசு காத்துக் கொண்டிருக்கிறது. தமிழக எல்லைக்குள் இருந்தால் நான் பாதுகாப்பேன். அதனால் தான் அவ்வாறு கூறினேன்' என்றார்.'காமராஜர் இறக்கும் போது கடைசியாக கருணாநிதி கையை பிடித்துக் கொண்டு, 'நீங்கள் தான் ஜனநாயகத்தின் காவலர்' என கூறினார்...' என்றார். இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'காமராஜர் மதியம் துாக்கத்துலயே இறந்து போனதா படிச்சிருக்கோம்... இவர் வேற விதமா சொல்றாரே...' என முணுமுணுக்க, சக நிருபர், 'இவர் சொல்றதை, காமராஜர் வந்து மறுக்கப் போறாரா என்ன...' என, சிரித்தபடியே கிளம்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

panneer selvam
ஜூலை 17, 2025 22:47

Trichy Siva , you are so lucky , Unfortunately even after your blatant lie , you are getting positive support by DMK leadership . It is called comradeship


Anantharaman Srinivasan
ஜூலை 15, 2025 01:19

காமராஜர் கருணாநிதியை வீட்டுக்குள்ளேயே விட்டதில்லை. பின் எப்படி..?.


D.Ambujavalli
ஜூலை 14, 2025 16:48

ஆளில்லாதபோது அடித்து விடுவதில் இந்தக்கட்சிக்கு ஈடு. இணையே இல்லை


PR Makudeswaran
ஜூலை 14, 2025 15:28

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கட்சி. எல்லோரும் பொய். இஷ்டத்திற்கு பொய். காமராஜருக்கு தெரியாதா மு க வை பற்றி?? இந்த ஜென்மம் முடிந்தாலும் இனியும் ஏழு பிறவி இருக்கு எழிலும் அவரின் ஆன்மா சுற்றி சுற்றி வந்து அடிக்கும். இவர்களையும் அடிக்கும். இவர்களின் பரம்பரையையும் சேர்த்து அடிக்கும்.


கண்ணன்
ஜூலை 14, 2025 11:58

வாயைத் திறக்கும்போதே பொய்கள்…


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை