உள்ளூர் செய்திகள்

அது உண்மை தானோ?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., - நாம் தமிழர் கட்சி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி, அ.தி.மு.க., ஒதுங்கியதை சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார். முத்துசாமி ஏற்கனவே அ.தி.மு.க.,வில் இருந்தவர் என்பதால், தொகுதியில் தனக்கு பழக்கமான அந்த கட்சியின் நிர்வாகிகள் வீடுகளுக்கு சென்று, தி.மு.க.,விற்கு ஓட்டு சேகரிக்கிறார்.மாநகராட்சியின் 42வது வார்டு, மரப்பாலம் பகுதி, வளையக்கார வீதியில் முத்துசாமி ஓட்டு சேகரித்தபோது, அ.தி.மு.க., மரப்பாலம் பகுதி செயலர் சுப்பிரமணியம் என்பவரை, அணைத்து பிடித்து பேசியபடியே சிறிது துாரம் அழைத்துச் சென்றார். அ.தி.மு.க.,வினர், அமைச்சருடன் கலகலப்பாக பேசி, போட்டோவும் எடுத்துக் கொண்டனர்.இதை பார்த்த ஒருவர், 'நாங்க ரெண்டு கட்சிகளும் பங்காளிகள்னு முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு அடிக்கடி சொல்வாரே... அது உண்மை தானோ...?' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

M Ramachandran
பிப் 02, 2025 17:16

தவக்களை கட்சியை யாருக்கு சப்போர்ட்டு


D.Ambujavalli
பிப் 02, 2025 06:37

இதைச்சொல்ல ராஜு எதற்கு? புழக்கடை உறவு அம்மா மறைந்தது முதலே தொடர்கிறதே இப்போது வெட்ட வெளிச்சமாகி, நாளை, பேசாமல் கட்சியையே திமுகவுடன் இணைத்து ஜோதியில் கலந்துவிடும் நிலைக்கு இதெல்லாம் முன்னோட்டம்தானே


புதிய வீடியோ