உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / குரங்கு சேட்டை இதுதானோ?

குரங்கு சேட்டை இதுதானோ?

மதுரை மாவட்டம், பாலமேடு பேரூராட்சி அலுவலகத்தில் குரங்குகள் தொல்லை அதிகம். இவற்றை விரட்ட எவ்வளவோ முயற்சிகள் செய்தும், பலனில்லை.சமீபத்தில், காலையில் ஊழியர்கள் அலுவலகத்தை திறந்தபோது, உள்ளே இருந்து இரண்டு குரங்குகள் கத்தியபடியே பாய்ந்து வெளியே ஓடின. அதன்பின் தான், குரங்குகள் இரவு முழுதும் உள்ளே சிக்கியிருந்தது தெரியவந்தது.அலுவலகத்தின் உள்ளே சென்று பார்த்த ஊழியர்கள் அதிர்ந்து போயினர். காரணம், அங்கிருந்த பைல்களை எல்லாம் குரங்குகள் கிழித்து எறிந்து நாசமாக்கியிருந்தன. பசிக்கு எதுவும் கிடைக்காமல், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், பேனாக்களை கடித்து குதறி வைத்திருந்தன. பாத்ரூமில் குழாயை திறந்து விட்டிருந்ததில், தெப்பம் போல தண்ணீர் தேங்கியிருந்தது.இதை சுத்தம் செய்வதற்குள் ஊழியர்கள் திண்டாடி விட்டனர். ஊழியர் ஒருவர், 'குரங்கு சேட்டைன்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கோம்... இப்ப தான் நேர்ல பார்க்கிறோம்...' என புலம்ப, சக ஊழியர்கள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anantharaman Srinivasan
ஏப் 09, 2025 20:53

Office க்குள் குரங்குகள் துழைந்ததெப்படி..? ஜன்னல் கதவுகளை சரியாக மூடாதது, ஊழியர்களின் அஜாக்கிரதை தான் காரணம்.


D.Ambujavalli
ஏப் 09, 2025 06:56

குரங்குகள் கோப்புகளை அழிந்துவிட்டன என்று நாளை ஏதாவது கேள்வி, எழும்புமானால் நல்ல காரணத்தைக் கொடுத்த குரங்குகளுக்கு நன்றி சொல்லுங்க சார்


Yes your honor
ஏப் 09, 2025 10:05

உண்மைக் குரங்குகளை சாக்காக வைத்துக் கொண்டு மனிதக் குரங்குகள் முக்கியமான பைல்களை கிழித்திருந்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை. நம் தலையெழுத்து விடியா மாடல் என்னும் பேய்க்கு வாழ்க்கைப் பட்டாச்சு, அனுபவிக்கத்தான் வேண்டும்.


புதிய வீடியோ