உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / ‘விபரமான அதிகாரிகள் தான்!’

‘விபரமான அதிகாரிகள் தான்!’

த.வெ.க., கூட்டணியில் இருக்கும் காங்., கட்சியைச் சேர்ந்த, தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதன் தலைமையில், மதுரையில் ஆறு மாவட்ட மாணவர்கள், பேராசிரியர்கள், கல்லுாரி நிர்வாகிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், உயர்கல்வி துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர். கூட்டம் முடிந்த பின் அதிகாரிகள் சூழ, அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி அளித்தார். தேனி சிறை கைதிகள் தப்பியோட்டம், விழுப்புரத்தில் சிறுமி காணாமல் போன விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்விகள் கேட்டனர். தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக, டில்லி போராட்டத்தில் காங்., பங்கேற்றது குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அடுத்த நொடியே, அமைச்சர் அருகே இருந்த செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் எழுந்து ஓரமாக சென்று விட்டனர். இதை பார்த்த நிருபர் ஒருவர், ‘தமிழக அரசியல் குறித்த கேள்விகளுக்கு தைரியமா இருந்த அதிகாரிகள், மத்திய அரசு பிரச்னை குறித்து கேட்கவும் விபரமா நழுவிட்டாங்களே’ என முணுமுணுக்க, சக நிருபர்கள் சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
நவ 05, 2026 20:14

'கூட. போட்டோவில். நின்ற. பாவத்துக்காக. துறை. நடவடிக்கை. அது, இது என்று. ஏன் வம்பில். மாட்ட. வேண்டும். , அமைச்சரா. நம்மை. காப்பாற்ற. வருவார். 'என்ற அதீத. எச்சரிக்கை. உணர்வுதான்