உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / அதே நினைப்பு தான்!

அதே நினைப்பு தான்!

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், திருப்பூரில் நடந்த தற்காப்பு விழிப்புணர்வு பேரணியில், ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.பேரணியை துவக்கி வைத்து, பி.ஏ.பி., வெள்ளக்கோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி பேசுகையில், 'வெள்ளக்கோவில் அருகே, ஆடு திருட வந்தவனை விவசாயிகள் துரத்தி பிடித்தோம். தடுக்கி விழுந்ததில், திருடன் கையில் காயமாகி விட்டது. போலீசாரோ, திருடனின் கையை உடைத்ததற்காக உங்க மேல தான் எப்.ஐ.ஆர்., போடணும் என்கின்றனர். ஆடு திருட்டை எல்லாம் அவங்க ஒரு திருட்டாகவே பார்க்கவில்லை' என்றார்.இதை கேட்ட விவசாயி ஒருவர், 'போலீசார் பிடிக்கும் போது, குற்றவாளிகள் வழுக்கி விழுவதும், அதுக்கு மாவு கட்டு போடுவதும் வழக்கமா இருக்கே... இதையும் அந்த மாதிரி நினைச்சுட்டாங்களோ...' என முணுமுணுக்க, சக விவசாயிகள், 'அதே நினைப்பு தான்...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !