உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / வெறும் வாயில் வெற்றிலை!

வெறும் வாயில் வெற்றிலை!

த.மா.கா., சார்பில், சென்னை பெரம்பூரில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில், கட்சித் தலைவர் ஜி.கே.வாசன்பங்கேற்றார்.விழாவில் அவர் பேசுகையில், 'மதவாதத்தின் மீதோ, மதச்சார்பின்மை மீதோ எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. நாங்கள் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ள கட்சி. மத்திய, மாநில அரசுகள் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்கக்கூடிய திட்டங்களை உறுதி செய்து, கொண்டு வந்து செயல்படுத்தக்கூடிய கட்சி. அதில் ஏதாவது தடைகள் இருந்தால், அதை தைரியமாக தட்டிக் கேட்கக்கூடிய கட்சி தான் எங்களுடையது' என்றார்.இதைக் கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'இதென்ன வெறும் வாயில் வெற்றிலை மெல்வதை போல இருக்கே... சிறுபான்மையினருக்கு இவங்க என்ன திட்டத்தை உறுதிப்படுத்தி செயல்படுத்தினாங்க... எந்த பிரச்னையை தைரியமாக தட்டிக் கேட்டாங்கன்னு இங்க பட்டியல் போட்டா தானே தெரியும்...'என முணுமுணுக்க, மற்றவர்கள் ஆமோதித்து தலையாட்டி சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஜன 01, 2025 06:45

இவர் அதிமுக பின்னால் ஒளிந்துகொள்வார் அவர்கள் தட்டிக்கேட்கும்போது கையில் தட்டியுடன் பின்னால் நிற்பார் போலிருக்கிறது