வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அது. எப்படி. திடீரென்று. ஆதரவு. என்று. வெளிப்படையாக. சொல்வது? பார்க்க. வேண்டியவர்களை. பார்த்து, பேச வேண்டியதைபேசி, வாங்க ம் வேண்டியதை. திருப்தியாக. வாங்கியபின். தான். கூட்டணியை. உறுதிப்படுத்த. முடியும்
தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், சமீபத்தில் தஞ்சை வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், 'தமிழகத்தில் மின்வெட்டு அதிக அளவில் உள்ளது. 'மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்' என சொல்லும் தமிழக அரசு இதுவரை நடைமுறையில் செயல்படுத்தவில்லை. தி.மு.க., ஆட்சியில் நடந்த கொலை, கொள்ளை, கஞ்சா, வழிப்பறி சம்பவங்கள் இப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. 'தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஆதரவு யாருக்கும் இல்லை. த.வெ.க., கூட்டணியில் எங்கள் கட்சி இணையுமா என்பது, எதிர்கால சூழ்நிலையை பொறுத்து அமையும்' என்றார். இதை கேட்ட நிருபர் ஒருவர், 'இடைத்தேர்தலில் த.வெ.க.,வுக்கு ஆதரவு தந்து, அந்த கூட்டணிக்குள்ள நுழைய, இவர் பிள்ளையார் சுழி போடலாமே' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கிளம்பினர்.