உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / இவருக்கு சபாஷ் போடலாம்!

இவருக்கு சபாஷ் போடலாம்!

திருப்பூர் நகைச்சுவை முற்றம் சார்பில் நடந்த, 'சிரிப்போம்; சிந்திப்போம்' நிகழ்ச்சியில், 'ப்ரித்வி' பனியன் நிறுவன நிர்வாக இயக்குனர் பாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பாலன் பேசுகையில், 'செய்யும் தொழிலே தெய்வம் என்பது உண்மையானால், நிறுவனங்களும் கோவிலை போல் இருக்க வேண்டும். எங்கள் நிறுவனத்தில், 11 ஆண்டுகளாக, தினமும் காலை அரை மணி நேரம், 2,300 பேர் தியானம் செய்த பிறகே பணிகளை துவங்குகின்றனர். அரை மணி நேரம் வேலை கெடுகிறது என்று பலரும் நினைத்தனர். ஆனால், தொழிலாளர்கள் தெளிவான சிந்தனையுடன் பணியாற்றி, உற்பத்தியை தரமாக பெருக்கி கொடுக்கின்றனர்' என்றார்.பார்வையாளர் ஒருவர், 'தொழிலாளர் ஆரோக்கியம் தான் நிறுவனத்தின் ஆரோக்கியம்னு யோசித்த இவருக்கு சபாஷ் போடலாம்...' என கூற, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Dharmavaan
ஜன 18, 2025 09:00

90 மணி நேர வேலை மிருகத்தனம் நாம் வேலை செய்வது வாழ்வதற்கு ...வாழ்வதே வேலை செய்வதற்கு அல்ல சீக்கிரம் வயோதிகம் வந்துவிடும்


baala
ஜன 18, 2025 09:48

அந்த கருத்துக்கள் ஒருவர் மேலும் பணக்கார ஆகவேண்டும் என்றும், இன்னொருவர் அதிக சம்பளம் மற்றும் ஊக்கக் தொகை பெறுவதற்கும் சமூக அக்கறையோடு சொன்ன வார்த்தைகள்.


N Annamalai
ஜன 18, 2025 06:59

அருமை .பாராட்டுகள்


D.Ambujavalli
ஜன 18, 2025 06:16

‘வாரம் 90 மணி வேலை செய்யுங்கள் ‘. என்னும் நிறுவனங்கள், ஒரு கால் மணி, மனதை ஒருமித்து, இவ்வாறு செய்து, ஊழியர்களின் நலனைப்பற்றி சிந்திப்பார்களா? ‘அரை மணியா, அந்த நேரத்தில் எத்தனை கோடி turn over செய்யலாம்’ என்றுதான் திகைப்பார்கள்


முக்கிய வீடியோ