உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / நாங்க சுகர் பேஷன்டுங்க!

நாங்க சுகர் பேஷன்டுங்க!

மதுரை மண்டல ம.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம், அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ தலைமையில் மதுரையில் நடந்தது. இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டம் மதியம், 2:00 மணியை தாண்டியும் நடக்கவே, பலரும் உணவருந்த கிளம்பினர். கூட்டம் கலைந்து செல்வதை பார்த்து கோபமடைந்த வைகோ எழுந்து, நிர்வாகிகளை அமருமாறு கண்டித்தார். பின் வைகோ பேசும்போது, 'எமர்ஜென்சி காலத்தில் உணவருந்தாமல் நீண்ட நேரம் கூட்டம் நடத்தியுள்ளேன்; கால நேரம் பார்க்காமல் உழைத்திருக்கிறேன்...' என, உணர்ச்சி பொங்க விவரித்தார். அப்போது கூட்டத்தில் இருந்த நிர்வாகி ஒருவர், 'நீங்க உழைச்சீங்க... இல்லன்னு சொல்லல... ஆனா, நாங்க சுகர் பேஷன்டுங்க... மணி, 3:00 ஆயிடுச்சு... சாப்பிடலன்னா மயக்கம் வந்துடும்...' என புலம்ப, சக நிர்வாகிகள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Mahendran Puru
ஜூலை 23, 2025 08:09

இந்த உணர்ச்சி பொங்குற கதையெல்லாம் இன்னுமா எடுபடுது? இன்னும் இவர் பின்னாடி போகிறவர்கள் நம்பலாம்.


D.Ambujavalli
ஜூலை 22, 2025 16:54

இந்த emergency பல்லவியை பாடும் இவருக்கு அப்போது என்ன வயது இருந்திருக்கும்? 50 வருஷத்துக்கு முன் பசியும், பட்டினியும் தாங்கும் உடம்பாக இருந்திருக்கும் வந்த நிர்வாகிகளில் எத்தனை பேர் 60, 70+ இருந்தார்களோ ?


கண்ணன்
ஜூலை 22, 2025 11:59

எத்தைபேர் இருந்தனர்?


முக்கிய வீடியோ