வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நேற்று முளைத்த கட்சிக்காக தொகுதி மாறுவதென்றால் இத்தனை கால வெற்றியினால் மக்களின் நல்ல அபிப்பிராயத்தைப் பெற்றது சந்தேகம்தான் என்று தோன்றிவிடும்
மேலும் செய்திகள்
முதல்வர் விழாவை புறக்கணித்த வனத்துறை அதிகாரி!
17-May-2025
மதுரை மேற்கு சட்டசபை தொகுதியை, 'அ.தி.மு.க., கோட்டை' எனக் கூறி வரும், முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு, தொடர்ந்து அத்தொகுதியிலேயே போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார். அடுத்தாண்டு சட்டசபை தேர்தலில், அவருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், தி.மு.க.,வில் மேற்கு தொகுதி தேர்தல் பொறுப்பு, அமைச்சர் மூர்த்தி வசம் சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டது. அவரும் மேற்கு தொகுதியை கைப்பற்றும் விதமாக, அங்கு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி, வாக்காளர்களை கவர்ந்து வருகிறார்.இந்த சூழலில், 'மதுரை மேற்கு தொகுதியில், விஜய் போட்டியிடுவார். 1.10 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்வராவார்' என, த.வெ.க.,வினர், தொகுதியின் பல இடங்களில் போஸ்டர் ஒட்டியிருந்தனர்.இதை பார்த்து அதிர்ச்சியான, அ.தி.மு.க., தொண்டர் ஒருவர், 'விஜய்க்கு வேற தொகுதியே கிடைக்கலையா...' என புலம்ப, சக தொண்டரோ, 'விஜய் மட்டும் இங்க வந்தா, செல்லுார் ராஜு தொகுதி மாறிடுவாருப்பா...' என்றபடியே நடந்தார்.
நேற்று முளைத்த கட்சிக்காக தொகுதி மாறுவதென்றால் இத்தனை கால வெற்றியினால் மக்களின் நல்ல அபிப்பிராயத்தைப் பெற்றது சந்தேகம்தான் என்று தோன்றிவிடும்
17-May-2025