உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / ரிசீவரை எடுத்து வச்சிடுவாங்களே!

ரிசீவரை எடுத்து வச்சிடுவாங்களே!

உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்குஉதவும் வகையில், திருச்சி, பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் வழிகாட்டுதல் மற்றும் சேர்க்கை விபரங்கள்வழங்குவதற்கான சேவை மையத்தை, தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் துவக்கி வைத்தார். அப்போது, சேவை மைய மேஜையில் டெலிபோன்இல்லாததால், 'சேவை மையத்திற்கான போன் எங்கே?'என, அமைச்சர் கேட்டார். 'அருகில் உள்ள டேபிளில்போன் உள்ளது' என, துணைவேந்தர் மற்றும் ஆசிரியர்கள் கூறினர். அதற்கு, 'பெரும்பாலும், போன் வாயிலாகத் தான் அதிகமானோர் தொடர்பு கொள்வர். எனவே, உடனடியாகமேஜையில் போன் வைக்க வேண்டும்' என்று அமைச்சர் அறிவுறுத்தினார். அங்கிருந்த நிருபர் ஒருவர், 'போனை வச்சிடுவாங்க... ஆனா, ரிசீவரை எடுத்து கீழே வச்சிடுவாங்களே... பல அரசு அலுவலகங்கள்ல இதானே நடக்குது...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சத்தமின்றி சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
நவ 15, 2024 17:47

போன் எண்கள் கொடுத்து நாடகம் ஆடுவார்கள் ஆனால் போனை எடுக்கவே மாட்டார்கள். இது எல்லா சேவை மையங்களும் நடக்கிறது இது அமைச்சருக்கும் தெரியும் பிறகு எதற்கு இந்த போலி நாடகம்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை