வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இவர். கட்சியிலுள்ள. நிர்வாகிகள். செய்வதெல்லாம். இவர் கண்களுக்கு. எப்படித். தெரியும்?
த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக மின் துறை அமைச்சர் நிர்மல்குமார், மதுரை விமான நிலையத்தில் சமீபத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘முதல்வர் விஜயை நம்பி இடைத்தேர்தலில் த.வெ.க.,விற்கு மக்கள் வெற்றியை கொடுத்துள்ளனர். பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்திருந்தார். தேவையான திட்டங்களை தொடங்கி வைத்தார். அதேநேரம், கட்சி முக்கியஸ்தர்களை பிரபலப்படுத்த அரசு நிகழ்ச்சிகளை பயன்படுத்தக் கூடாது. ‘மத்திய அரசின் நிகழ்ச்சியில், பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரனை அமர வைத்தது தவறான முன் உதாரணம். எம்.எல்.ஏ., – எம்.பி., இல்லாத ஒருவரை எப்படி அமர வைக்கலாம். இது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். அரசு நிகழ்ச்சிகளுக்கு எங்கள் கட்சி நிர்வாகிகள் செல்லக்கூடாது என அறிவுறுத்தி உள்ளோம்’ என்றார். இதை கேட்ட நிருபர் ஒருவர், ‘இவர் சொல்றதை யார் கேட்கிறாங்க... இன்றும் இவரது கட்சியினர், அரசு அலுவலகங்களுக்கு போய், ‘ரீல்ஸ்’ எடுத்துட்டு தான் இருக்காங்க’ என முணுமுணுக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.
இவர். கட்சியிலுள்ள. நிர்வாகிகள். செய்வதெல்லாம். இவர் கண்களுக்கு. எப்படித். தெரியும்?