உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  அதான் ஊத்தி மூடியாச்சே!

 அதான் ஊத்தி மூடியாச்சே!

சிவகங்கை தொகுதி காங்., - எம்.பி., கார்த்தி, சமீபத்தில் மானாமதுரையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 'இந்தியாவில் பிரதமராக வேண்டும் என்றால், 272 எம்.பி.,க்களுக்கு தலைவராக இருக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளுமே, தங்களது தலைவர்களை வானளாவ புகழ்வது வழக்கம் தான். குறிப்பாக, தமிழகத்தில் இந்த வழக்கம் அதிகம். முதல்வர் விஜய் திரையுலகில் இருந்து வந்துள்ளார். அதனால், 'விஜய் தான் பிரதமர் வேட்பாளர்' என, அவரது ரசிகர்கள் கூறுவது இயல்பு தான். 'சென்னைக்கு உலகத்தரம் வாய்ந்த சர்வதேச விமான நிலையம் அவசியம். ஹைதராபாத், பெங்களூரை விட, நாம் பின்தங்கிய நிலையில் உள்ளோம். இந்தியாவிலேயே மிகவும் மோசமான விமான நிலையமாக சென்னை உள்ளது' என்றார். இதை கேட்ட நிருபர் ஒருவர், 'அதான் பரந்துார்ல சர்வதேச விமான நிலையம் கட்ட இருந்த திட்டத்தையும், த.வெ.க., அரசு ஊத்தி மூடிடுச்சே' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Balan Palaniappan
செப் 27, 2026 18:05

எல்லோருக்கும் தாங்கள் முதலீடு செய்த பரந்தூர் ஏர்போர்ட்டை ஒட்டிய நிலங்கள எல்லாம் வீணாகி போய்விடுமே என்ற பெருத்த கவலை திமுக மத்திய அரசு அதிகாரிகள் பிஜேபி குண்டாஸ் எல்லாருமே இதில் அடக்கம் விஜய் சரியாக ஆப்பு வைத்திருக்கிறார்


veeramani
செப் 27, 2026 09:33

தொகுதிக்கு நீங்கள் என்ன வேலை வாய்ப்பு திட்டங்கள் கொண்டுவந்தீர்கள் . எத்தணை மக்கள் வேல வாய்ப்பு பெறுகிறார்கள். அடுத்த தேர்தலில் இவர் எப்படி மக்களிடம் வாக்குகள் கேட்க இயலும்


Lakshminarasimhan
செப் 27, 2026 08:39

ஏன் இந்த விவகாரத்தில் மத்திய பா ஜ க சமரசம் செய்துகொண்டது இதற்கு காரணம் என்ன ?


சமீபத்திய செய்தி