உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / கூட்டணிக்கு வாய்ப்பிருக்கே!

கூட்டணிக்கு வாய்ப்பிருக்கே!

திண்டுக்கல்லில், 2016ல் நடந்த தேர்தல் பிரசாரத்தில் இரவு, 10:00 மணிக்கு மேல் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக, திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராக, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தன் ஆதரவாளர்களுடன் வந்தார்.அப்போது பேட்டியளித்த அவரிடம், நிருபர் ஒருவர், 'நடிகர் விஜயின் அரசியல் பயணம் குறித்து உங்கள் கருத்து என்ன?' என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு எந்த பதிலும் அளிக்காத வைகோ, சம்பந்தமில்லாமல் பிரதமர் மோடியை கடுமையாக சாடி பேசினார். இதை கவனித்த மூத்த நிருபர் ஒருவர், 'ஒரு வருஷத்துல சட்டசபை தேர்தல் வருது... எப்படியும் இவங்க, பா.ஜ.,வுடன் கூட்டணி சேர வாய்ப்பில்லை... ஆனா, விஜயுடன் கூட்டணிக்கு வாய்ப்பிருக்கே... அதான் விஜயை தவிர்த்து மோடியை விளாசுறாரு...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தவாறு நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Anantharaman Srinivasan
ஜன 26, 2025 23:41

பட்டுக்கோட்டை க்கு வழி கேட்டால் கொட்டைபாக்குக்கு விலை சொல்வதுபோல், விஜய் பற்றி கேட்டால் செவிடன் போல் மோடிபற்றிய பதில். வைகோ இனி அரசியல் அனாதை.


Rajarajan
ஜன 26, 2025 09:31

பாஸ், உங்களுக்கெல்லாம் நினைவு இருக்கா? அண்ணாநகர் ஒரு கொலையை நேரில் பார்த்தது போல, காதலிக்க நேரமில்லை படத்தில் வரும் திகில் காட்சி போல கதைசொல்லி, ஆதாரம் இருக்கிறது என்று பொதுவெளியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். பின்னர் நிருபர்கள் ஆதாரம் கேட்டபோது, இல்லை என்றார். பொதுவெளியில் பொதுமக்களிடம் இப்படி தவறான விஷயத்தை கூறி, திகில் ஏற்படுத்தியதற்கு இவர்மீது எந்த பொதுநல வழக்கும் இல்லையா ??


Yes your honor
ஜன 26, 2025 08:12

கட்டுமரத்தின் பாசறையில் கட்டுமரத்திற்கே டக்கர் கொடுக்கும் அளவிற்கு கடைந்தெடுத்த சுயநலவாதி, இவரெல்லாம் அரசியலுக்கு வரவில்லை என்று யார் அழுதார்கள்?


D.Ambujavalli
ஜன 26, 2025 06:37

அவர் ஒரு அரசியல் அனாதையாகி வெகு காலமாகிவிட்டது அவர் கருத்துக்கு யார் மதிப்பார்கள் ? திமுகவுடன் ஒட்டிக்கொண்டு ஒரு சீட் மகனுக்கு வாங்க அவர்களைத திருப்திப்படுத்த மத்திய எதிர்ப்பு ஜாலராவை எடுத்திருக்கிறார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை