உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / இங்கயும் துணை கமிஷனர் வரணும்!

இங்கயும் துணை கமிஷனர் வரணும்!

சென்னை மாநகராட்சியின், திருவொற்றியூர் மண்டலக் குழு கூட்டம் நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த மண்டலக் குழு தலைவர் தனியரசு தலைமை வகித்தார். இதில், கவுன்சிலர்கள் பலரும், தங்கள் வார்டுகளில் நிலவும் பிரச்னைகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பினர். அதற்கு அதிகாரிகள், 'பார்க்கிறோம்... சரி பண்ணிடுறோம்' என்ற மழுப்பலான பதில்களையே கூறினர். இதை, மண்டலக் குழு தலைவர் கண்டித்தார். இதை கவனித்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர் ஒருவர், 'மணலி மண்டலக் குழு கூட்டத்தில், சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை கமிஷனர் கட்டா ரவி தேஜா பங்கேற்று, சரியாக பதிலளிக்காத அதிகாரிகளை, 'லெப்ட் அண்டு ரைட்'னு வெளுத்து வாங்கினார். அதுபோல, திருவொற்றியூர் மண்டலக் குழு கூட்டத்திற்கும் அவர் வந்தால் தான், இந்த அதிகாரிகள் சரிப்படுவாங்க...' எனக் கூற, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
மே 28, 2025 19:08

சுகாதாரதுறை அதிகாரிகளும் ஓவர்ஸியர்களும் தினமும் தங்கள் வார்டுகளை சுற்றி பார்க்க வரணும். ஆனால் நடைமுறையில் எந்த அதிகாரியும் சீட்டைவிட்டு நகருவதேயில்லை. சென்னை முழுவதும் தெருக்கள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. தெரு குப்பைகள் வாரத்தில் ஒருநாள் மட்டுமே எடுக்கப்படுகிறது.


D.Ambujavalli
மே 28, 2025 18:36

பாவம் அதிகாரிகள் மட்டும் வெளிப்படையாக கள நிலவரத்தை வெளியிட முடியாத என்ன அழுத்தத்தில், யார் மூலம், இருக்கிறார்களோ? சும்மா எதையாவது கூறப்போய், 'அந்த' மேலிடம் left and right வாங்கிவிடுமே என்ற அச்சம் காரணமாக இருக்கலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை