உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  துணை முதல்வர் ஆசை?

 துணை முதல்வர் ஆசை?

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர்கள் சங்க மாநாடு சமீபத்தில் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக, த.வெ.க., பொதுச்செயலரும், தமிழக நீர்வளத் துறை அமைச்சருமான ஆனந்த், விமானத்தில் வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு, த.வெ.க., நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, தொண்டர் ஒருவர், 'துணை முதல்வர் ஆனந்த் வாழ்க' என்று கோஷமிட்டார். தொடர்ந்து அவரே, 'துணை முதல்வர் எங்கள் அண்ணன் வாழ்க' என்றும் கோஷமிட்டார். இதை கவனித்த அமைச்சர் ஆனந்த், சிரித்து கொண்டே காரில் ஏறி, மணப்பாறைக்கு புறப்பட்டு சென்றார். இதை பார்த்த போலீஸ்காரர் ஒருவர், 'வழக்கமா இப்படி கோஷம் போட்டா, 'அதெல்லாம் கூடாது'ன்னு தலைவர்கள் தடுப்பாங்க... ஆனந்த் சிரிச்சிட்டே போறதால, அவருக்கும் துணை முதல்வர் ஆசை இருக்கும் போல' என முணுமுணுக்க, சக போலீசார் ஆமோதித்தபடியே கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஆக 29, 2026 21:22

நிஜ. முதல்வர். அம்போ. என்று. அமர்ந்திருக்கிறார் நிழல் முதல்வர். ஒருவர். எதற்கெடுத்தாலும். தானே. பதிலடி. கொடுக்கிறார் அந்த நிழலுக்குத். துணை. நிழலாக. இவர். வரவேண்டுமென்று. விரும்புவாரா ?


சமீபத்திய செய்தி