வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இவர். கட்சி. ஒன்று. இருப்பதை. இப்படித்தானே. மக்கள். முன். காட்டிக்கொள்ள. முடியும்?
மேலும் செய்திகள்
'அமைச்சர் கனவில் இருக்காங்களோ?'
12-Jul-2026
புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி, திருநெல்வேலியில் சமீபத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 'துாத்துக்குடி போலீஸ் ஸ்டேஷனில் வாலிபர் இறந்தது குறித்து முழுமையான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும். கைதானவர்களிடம் மனிதநேயத்துடன் நடக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை, போலீசார் கடைப்பிடிக்க வேண்டும். 'இன்னும் சில அமைச்சர்கள், ரசிகர் என்ற மனநிலையிலேயே உள்ளனர். சட்டம் - -ஒழுங்கு பிரச்னைகளிலும், மாணவர்களின் கோரிக்கைகளிலும் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். ஜனநாயகன் என்ற பெயரில் படம் எடுத்தால் மட்டும் போதாது; வாழ்க்கையிலும் ஜனநாயகத்தை கடைப்பிடிக்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும்' என்றார். இதைக் கேட்ட நிருபர் ஒருவர், 'பக்கத்து இலைக்கு பாயசம் மாதிரி, மற்ற எதிர்க்கட்சிகளுக்காக பேசுறாரே' எனக் கூற, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.
இவர். கட்சி. ஒன்று. இருப்பதை. இப்படித்தானே. மக்கள். முன். காட்டிக்கொள்ள. முடியும்?
12-Jul-2026