உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / பொறுப்பாளர் உஷாரா இருக்காரு!

பொறுப்பாளர் உஷாரா இருக்காரு!

கோவை மாநகர் மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம், சமீபத்தில் நடந்தது. மாநகர் மாவட்ட பொறுப்பாளர் செந்தமிழ் செல்வன் தலைமை வகித்தார். இதில், மேற்கு மண்டல தி.மு.க., பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசும்போது, '2021 சட்டசபை தேர்தல், 2024 லோக்சபா தேர்தலில், தி.மு.க., பெற்ற ஓட்டுகளை, ஒப்பிட்டு பார்க்க வேண்டும். 2026 சட்டசபை தேர்தலில், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், 70 ஓட்டுகள் கூடுதலாக பெற வேண்டும். 'அதற்காக, 72 ஓட்டுகள் வாங்கி விட்டோம் என கூலாக சொல்லக் கூடாது. ஏற்கனவே பெற்ற ஓட்டுகளை விட, 70 ஓட்டுகள் கூடுதலாக பெற வேண்டும் என்பதை, நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்...' என்றார். இதை கேட்ட தி.மு.க., நிர்வாகிகளில் ஒருவர், 'பொறுப்பாளர் எவ்ளோ உஷாரா இருக்காரு பாருங்க... நம்மாளுங்க தேர்தல் நேரத்துல, 'அசால்டா' இருந்துடக் கூடாதுன்னு இப்பவே எச்சரிக்கை பண்றாரு...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை