உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  சும்மா அரசியல் பண்றாங்க!

 சும்மா அரசியல் பண்றாங்க!

சென்னை, வண்ணாரப்பேட்டையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், தி.மு.க., இளைஞரணி செயலரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி கலந்து கொண்டார். அவர் பேசுகையில், 'நீட் தேர்வு எதிர்ப்பு என்பது தமிழகத்திற்கு புதிதல்ல. துவக்கம் முதலே ஆர்ப்பாட்டம், போராட்டம், கையெழுத்து இயக்கம் என பல வடிவங்களில், நீட்டுக்கு எதிராக தி.மு.க., போராடுகிறது. 'நீட் விலக்கு வேண்டுமென அப்போதைய முதல்வர்ஸ்டாலின், சட்ட முன்வடிவை கொண்டு வந்தார்.அதற்கு கவர்னர் ஒப்புதல் வழங்கவில்லை. அதற்காக, உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய இயக்கம் தி.மு.க., தான்' என்றார். இதைக் கேட்ட பார்வையாளர் ஒருவர், 'இவ்வளவு போராட்டங்கள் நடத்தியும், இவங்களால நீட் தேர்வை ஒழிக்க முடியலையே...' என முணுமுணுத்தார். அருகில் இருந்தவர், 'அது, நம்மை விட தி.மு.க.,வினருக்கு நல்லாவே தெரியும்... சும்மா நீட்டை வச்சு அரசியல் பண்றாங்க... அவ்வளவு தான்' என்றபடியே அங்கிருந்து நகர்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஆக 06, 2026 19:17

நூற்றில். ஒரு. வார்த்தை இவர்கள் கூவிக்கொண்டே. இருக்கட்டும் இத்தனை Batch களில் தேர்வு. எழுதியவர்கள். பலர். அரசு. மருத்துவர்களாகி. . ஓய்வும் எடுத்துக்கொண்டு. விடுவார்கள் அடுத்து இன்பநிதியை. இறக்கப்போகிறார்களா ?