உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / நம்மை முட்டாள் ஆக்குறாங்க!

நம்மை முட்டாள் ஆக்குறாங்க!

அரியலுார் மாவட்ட, அ.தி.மு.க., சார்பில் நடந்த அண்ணாதுரை பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க., அவை தலைவர் தமிழ்மகன் உசேன் பங்கேற்றார்.அப்போது அவர் பேசுகையில், 'ஜெயலலிதா, பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தார். பின், 'தெரியாமல் கூட்டணி வைத்து விட்டேன்; இனி என் வாழ்க்கையில், பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க மாட்டேன்' என, அறிவித்தார்.'அதே போல தான், கட்சியின் இப்போதைய பொதுச்செயலர் பழனிசாமியும் தெரியாமல், பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து விட்டார். நான்கரை ஆண்டு ஆட்சியை காப்பாற்ற, பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து தான் ஆக வேண்டும் என்ற நிலை அப்போது இருந்தது; தற்போது மாறிவிட்டது. பா.ஜ.,வுடன் எந்த காலத்திலும் இனிமேல் கூட்டணி கிடையாது' என்றார்.பார்வையாளர் ஒருவர், 'இவங்க வசதிக்கு ஏத்த மாதிரி மாறிக்குவாங்க... இதையெல்லாம் கேட்குற நம்மை முட்டாள் ஆக்குறாங்க...' என, விரக்தியை வெளிப்படுத்தியவாறு நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

D.Ambujavalli
செப் 23, 2024 19:15

இன்றைக்கு பா ஜ வுடன் 'ஊடல்' , அடுத்த தேர்தலுக்குள் சமரசம் ஆகிவிடும் ஜெ போல, மோடிஜியே வந்து கேட்ட போதும், கறாராக 'வந்தீங்களா, விருந்து சாப்பிட்டீங்களா, சென்று வாருங்கள்' என்று சொல்லியும் துணிச்சல் இவர்களுக்கு உண்டா /


selva kppk
செப் 23, 2024 10:54

அந்த பார்வையாளர் அப்படி சொல்லும்போது


Natchimuthu Chithiraisamy
செப் 23, 2024 10:36

அரசியல் என்பது தொழிலும் அல்ல சேவையும் அல்ல. சோறு திங்கவேண்டும் அதன் வாரிசுகள் காலம் முழுவதும் திருடிய பணத்தில் வாழ்ந்தேன் என்று அல்லல் பட வேண்டும். பழிசொல்லுதான் வரும் சொத்து நாறாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை