உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / அவங்களே காணாம போயிடுவாங்க!

அவங்களே காணாம போயிடுவாங்க!

ஹிந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் சமீபத்தில் பேட்டி அளித்தார். அவர் கூறும்போது, 'ஆன்லைன் கட்சியான கரப்பான் பூச்சி கட்சி, தேச விரோதிகளுடன் சேர்ந்து, இந்திய தேர்தல் ஜனநாயகத்தை சீர்குலைக்க நினைக்கிறது; இந்தியாவில் ஸ்திரத்தன்மையுடன் இயங்கும் பிரதமர் மோடி ஆட்சியை வங்கதேசம், நேபாளம் போல வீழ்த்த முயற்சிக்கிறது. 'தமிழகத்தில் இத்தகைய போராட்டங்களுக்கு முதல்வர் விஜய் அனுமதி தரக்கூடாது. கரப்பான் பூச்சியை ஆதரிக்கும் தி.மு.க., - கம்யூ., - வி.சி., கட்சியினர் சில மாதங்கள் முன்னர் வரை ஒன்றாக இருந்தவர்கள். தற்போது, த.வெ.க., அரசை கவிழ்க்க சதி செய்கின்றனர். வளர்ச்சி அரசியலுக்கு எதிரான கம்யூ., கட்சிகளை தடை செய்ய வேண்டும்' என்றார். உடனிருந்த ஹிந்து மக்கள் கட்சி தொண்டர் ஒருவர், 'கம்யூ., கட்சிகளை தடை எல்லாம் பண்ண வேண்டாம்... சில வருஷங்கள்ல அந்த கட்சிகளே காணாம போயிடும்' என, 'கமென்ட்' அடிக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ