உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  இவங்க தான் விளக்கணும்!

 இவங்க தான் விளக்கணும்!

தமிழக பா.ஜ., துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, ராசிபுரத்தில் சமீபத்தில் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், 'மத்திய அரசின், 2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பெருவழி பாதையாக அமைந்துள்ளது. குறிப்பாக, கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்திற்கு, 22,873 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 'அம்ரித் பாரத்' திட்டம் மூலம் தமிழகத்தில், 77 ரயில் நிலையங்கள் புதுப்பொலிவு பெறும். 'ராசிபுரத்தில், 854 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட கூட்டு குடிநீர் திட்டத்தில், மத்திய அரசின் பங்கு மட்டும், 450 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது. இவ்வளவு நிதியை மத்திய அரசு ஒதுக்கியும், தமிழகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை என்ற தவறான தகவலை மக்களிடம், தி.மு.க., அரசு பரப்பி வருகிறது' என்றார். இதை கேட்ட நிருபர் ஒருவர், 'எதிர்க்கட்சி என்றால் அப்படித்தான் சொல்வாங்க... இவங்க தான், ஆதாரங்களுடன் மக்களிடம் விளக்கணும்...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !