பாட்டு போட்டு கவர் பண்றாங்க!
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி, சந்தைப்பேட்டையில், தே.மு.தி.க., கொடி அறிமுகமாகி, 26ம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் சமீபத்தில் நடந்தது. 'மாலை, 4:00 மணிக்கு கூட்டம் நடக்கும்' என, விளம்பர நோட்டீஸ் ஒட்டியிருந்தனர். ஆனால், இரவு, 7:45 மணி ஆகியும் கூட்டம் துவங்கவில்லை. மேடையில், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மூன்று பேர், விஜயகாந்த் வேடமணிந்து, சினிமா பாடலுக்கு ஆடிப் பாடி கொண்டிருந்தனர். 'கட்சி கூட்டத்துக்கு அனுமதி வாங்கிட்டு, நடன நிகழ்ச்சியை நடத்துறாங்களே' என, பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் முணுமுணுத்தார். அருகில் இருந்த மற்றொரு போலீஸ்காரர், 'இங்க பேச வர்ற யாரும், மக்களை ஈர்க்கும் அளவுக்கு பேச மாட்டாங்க... அதான் கூட்டம் சேர்க்க, விஜயகாந்த் பாடல்களை போட்டு மக்கள் மற்றும் ரசிகர்களை கவர் பண்றாங்க...' எனக் கூற, அருகில் இருந்த சக போலீசார் சிரித்தனர்.