உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / திருமா போட்ட போடு!

திருமா போட்ட போடு!

தி.மு.க., பவள விழா மற்றும் அனைத்து கூட்டணிகட்சி தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் நடந்தது. இதில், தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் பேசுகையில், 'எத்தனையோ மாநாடுகளில் கலந்து கொண்டிருக்கிறேன். என் வாழ்நாளில், வகுப்பறையில் கூட மூன்று மணி நேரம் உட்கார்ந்தது கிடையாது. இன்றைக்கு நாலரை மணி நேரம் உட்கார வைத்தீர்களே... அதுதான் அற்புதமான உரை. அதிலும், இஸ்மாயில் பேசும்போது, மீண்டும் பழைய நினைவுகள் வந்து செல்கின்றன' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'திருமா போட்ட போடுல, கூட்டணி கட்சி தலைவர்களை வம்படியா கூப்பிட்டுமணிக்கணக்கில் பேச விட்டு, அதை கஷ்டப்பட்டாவதுகேட்டாகணும்னு உட்கார்ந்தீங்க... இல்லன்னாஎல்லாருக்கும் ரெண்டு நிமிஷம் ஒதுக்கி, கச்சிதமா கூட்டத்தை முடிச்சிருப்பீங்களே...' என முணுமுணுக்க,மற்ற நிருபர்கள் ஆமோதித்து சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
அக் 06, 2024 18:54

ஆஹா, இளமையில் பள்ளியில் கூட பொருந்தி உட்காதவரை ‘அமர்த்தி’ வைத்ததே கூட்டணிகள் மஹாப்பெரிய சாதனை போலும் என்ன செய்வது, வோட்டு பிரியாமல் நல்லபடி தேர்தல் நடக்க இதை எல்லாம் செய்து தீர்க்க வேண்டியிருக்கிறது


புதிய வீடியோ