உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / இது தான் கார்ப்பரேஷன் நிர்வாகம்!

இது தான் கார்ப்பரேஷன் நிர்வாகம்!

சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், தி.மு.க., மண்டல குழு தலைவர் தனியரசு தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக தி.மு.க., - எம்.எல்.ஏ.,வான கே.பி.சங்கர் பங்கேற்றார். கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பிரச்னைகள் குறித்து விளக்கினர்.இதில், எட்டாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ராஜகுமாரி, 'வார்டில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக புகார் அளித்தால், 'அங்கு நாய்களே இல்லை' என, அதிகாரிகள் தகவல் தெரிவித்து விடுகின்றனர். தவிர, வேறு இடத்தில் பிடித்து வந்த சில நாய்களை எங்கள் வார்டில் விட்டு சென்று விட்டனர்' என்றார்.பார்வையாளர் ஒருவர், 'இதென்னங்க கொடுமையா இருக்கு... புகார் கொடுத்து நாய்களை பிடிக்கலைன்னா கூட பரவாயில்லை. வேறு இடத்தில் பிடித்த நாய்களை விட்டு சென்றால் எப்படி...' என கூற, அருகில் இருந்தவர், 'இது தான் கார்ப்பரேஷன் நிர்வாகம் செயல்படுற லட்சணம்...' என்றபடியே எழுந்து நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை