| ADDED : நவ 15, 2024 10:31 PM
தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், துாத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பயணித்தார். அதே விமானத்தில், ஒரு தம்பதி தங்கள் 2 வயது குழந்தையுடன் பயணித்தனர்.விமானம் பறக்க துவங்கிய சில வினாடிகளில், குழந்தை திடீரென அழத் துவங்கியது. தம்பதி எவ்வளவோசமாதானப்படுத்தியும், அழுகையை நிறுத்த முடியவில்லை.இதைப் பார்த்த கீதாஜீவன் எழுந்து சென்று, குழந்தையின்தந்தையை தன் இருக்கையில் அமருமாறு கேட்டுக் கொண்டார்.பின், தாயின் அருகில் அமர்ந்த அமைச்சர், குழந்தையை வாங்கி தன் மடியில் வைத்து தாலாட்டு பாட, சிறிது நேரத்தில் அழுகையை நிறுத்திய குழந்தை, அயர்ந்து துாங்கியும் விட்டது.இதை பார்த்த சக பயணியர், 'அமைச்சர் கொஞ்ச நேரத்துல தாலாட்டு பாடி குழந்தைக்கு தாயாகவே மாறிட்டாங்களே... சமூக நலத்துறைக்கு ரொம்பவே பொருத்தமானவங்க தான்...' என, பாராட்டி நெகிழ்ந்தனர்.