உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / ‘வலையில் விஜய் விழ மாட்டாரு!’

‘வலையில் விஜய் விழ மாட்டாரு!’

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், வேலுாரில் சமீபத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘மத்திய பா.ஜ., அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மூலம், நாடு முழுதும் 13.50 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. எனவே, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும். ‘கேரள சட்டசபையில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை ரத்து செய்யக்கோரியும், தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகக்கோரியும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. அதேபோல், முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசும் உடனடியாக சட்டசபை சிறப்பு கூட்டத்தைக் கூட்டி, மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என்றார். இதை கேட்ட நிருபர் ஒருவர், ‘இவர் விரிக்கிற வலையில் எல்லாம் விஜய் லேசுல விழுந்துட மாட்டார்’ என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

D.Ambujavalli
நவ 04, 2026 19:43

முதல். முதலாக. ஆட்சியில் உட்கார்ந்து. 6. மாதமே. ஆன. நிலையில். அனாவசியமாக. மத்திய. அரசைப் பகைத்துக்கொள்ள. விஜய். அவ்வளவு. அசடா ?


கண்ணன்
நவ 04, 2026 13:05

பாவம், படிப்பறிவற்ற இவரின் உளறல்களை எல்லாம் எவரும் மிதிக்க மாட்டார்கள்


P. S. Prakash
நவ 04, 2026 10:34

இன்னுமா சார் உங்களை இந்த ஊர் உலகம் நம்புது ??????????????


Lakshminarasimhan
நவ 04, 2026 08:42

கம்யூனிஸ்ட்களின் வட்ட செயலர் வண்டு முருகன் செயலை அரங்கேற்ற விஜய் தயாராக இல்லை