மேலும் செய்திகள்
அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா...
30-Sep-2025
தி.மு.க., அரசை கண்டித்து, அ.தி.மு.க., அமைப்பு செயலர் செம்மலை தலைமையில், சேலம் மாவட்டம், மல்லுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், செம்மலை பேசுகையில், 'துணை முதல்வர் உதயநிதி, நம்மை பார்த்து அடிமைகள் என்கிறார். நாம, பா.ஜ.,வுக்கு அடிமையாகி விட்டதாக சொல்கிறார். டில்லியில், காங்., ஆட்சியில் அங்கம் வகித்த, தி.மு.க., அந்த கட்சிக்கு அடிமையானது. தமிழகத்தில், தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், காங்., அடிமையாகி விடுகிறது. 'காங்கிரசுக்கு, தி.மு.க., அடிமை; தி.மு.க.,வுக்கு, காங்., அடிமை என்ற நிலை தான் இருக்கிறது. இவர்கள், நம்மை பார்த்து அடிமைன்னு சொல்வதில் நியாயம் இல்லை...' என்றார். அவ்வழியே சென்ற ஒருவர், 'எந்த கட்சி, எந்த கட்சியிடம் அடிமையா இருக்குன்னு தெரியலை... ஆனா, மக்களை ஓட்டு போடும் அடிமைகளா தான் எல்லா கட்சி களும் பார்க்குது...' என, 'கமென்ட்' அடிக்க, அருகில் நின்றிருந்தவர், ஆமோதித்தபடியே நடையை கட்டினார்.
30-Sep-2025