மேலும் செய்திகள்
நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கல்
08-Nov-2025
ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சமீபத்தில் நடந்தது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அவர் பேசுகையில், 'ராஜாக்கள் பெயரில், அதிகளவில் ஊர்கள் உள்ளன; ராணிகள் பெயரில், சில ஊர்கள் மட்டுமே உள்ளன. அதில் முக்கியமானது, ராணிப்பேட்டை. அதனால்தான், இங்கு நடைபெறும் இந்த விழாவில், ராணிகளுக்கு, அதாவது பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நலத்திட்ட உதவிகள் பெறுவதில் பெண்களே அதிகம்' என்றார். பெண் பயனாளி ஒருவர், 'ஆமாம்... நீங்கள் பரம்பரை பரம்பரையாக மன்னராட்சி செய்கிறீர்கள். ஆனால், நாங்கள் பெயரளவில் தான் ராணியாக இருக்கிறோம். அதனால் தான், உங்களிடம் இன்னும்கையேந்தும் நிலையில் உள்ளோம்...' என, விரக்தியுடன் கூறி, அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
08-Nov-2025