உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / நாமளே ஓரணியா இல்லையே!

நாமளே ஓரணியா இல்லையே!

சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், 'ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு' பொதுக்கூட்டம், ஆத்துார், ராணிப்பேட்டையில் நடந்தது. மாவட்ட செயலர் சிவலிங்கம் தலைமை வகித்தார். இதில், முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி பேசிக் கொண்டிருந்தார். அப்போது, மேடையில் இருந்த, ஆத்துார் மேற்கு ஒன்றிய செயலர் வரதராஜன் எழுந்து சென்று, புகழேந்தி திரும்பி பேசிக்கொண்டிருந்த நிலையில், அவரை நோக்கி மைக்கை திருப்பினார். அதற்கு புகழேந்தி, 'மைக் எந்த திசையில் இருந்தால் எப்படி பேசுவது என்று எனக்கு தெரியாதா... இது தெரியாமல் தான் பேசுகிறேனா...' என, கடிந்து கொண்டார். அதிர்ச்சியான வரதராஜன், என்ன சொல்வது என தெரியாமல் தன் இருக்கைக்கு சென்றார். கீழே இருந்த கட்சி நிர்வாகி ஒருவர், 'ஒன்றிய செயலரை போய் இப்படி திட்டலாமா...? ஓரணியில் தமிழ்நாடு என கூட்டம் நடத்திட்டு, நாமளே ஓரணியில் இல்லைன்னா எப்படி...?' என, முணுமுணுக்க, சக நிர்வாகிகள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ