உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  நமக்கு ஒண்ணும் செய்யலையே!

 நமக்கு ஒண்ணும் செய்யலையே!

அரியலுார் மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம், சமீபத்தில் நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், ' நாம் பார்க்காத தோல்வி அல்ல. ஆனால், இந்த தேர்தலில் ஒரு மாயையை ஏற்படுத்தி, ஊடக மாயாஜாலத்தின் மூலமாக, த.வெ.க.,வினர் குறைபிரசவ வெற்றியை பெற்றுள்ளனர். அது முழு வெற்றி அல்ல; இது நீண்ட நாள் தாங்காது. 'எல்லா மக்களுக்கும் திட்டங்களை கொண்டு சேர்த்தது மட்டுமே வெற்றிக்கு உதவாது. இதுபோன்று குறுக்கு வழிகளில் வருவோரை தடுக்க வேண்டிய பணியையும் நாம் சேர்த்து செய்ய வேண்டும் என்பதை, காலம் நமக்கு கற்று தந்துள்ளது. இதையெல்லாம் தாண்டி மீண்டு வருவோம்' என்றார். இதில் பங்கேற்ற நிர்வாகி ஒருவர், 'இவரை மாதிரி அமைச்சர்கள் மட்டுமே வளமா இருந்தாங்க... நம்மை மாதிரி நிர்வாகிகளுக்கு ஒண்ணும் செய்யாம விட்டதும் தோல்விக்கு காரணம்...' என முணுமுணுக்க, சக நிர்வாகிகள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஜூன் 08, 2026 07:07

காட்சிப்பணிக்கு. உயிரைக்கொடுத்து. உழைக்கவும், மேலிடம் ஆணையிட்டால். ஒவ்வொரு. விழாவுக்கும். Collection செய்யவேண்டும் . இவர்கள். மாநாடு, வருகை. என்றால். கைக்காசைப்போட்டு. கூட்டம். சேர்க்க. வேண்டும். அதனால். மக்களின். அதிருப்தி, விமர்சனங்களை வாங்கிக். கட்டிக்கொள்ள. வேண்டும். அமைச்சர், எம். எல். ஏக்கள். சொகுசாக. வாழ்ந்து, கெத்தாக தலை. காட்டி, standard ஆக உள்ள. நாலு. வார்த்தையிப். பேசிவிட்டு, , டெண்டர், நியமனம். என்று. ஒவ்வொரு. பணிக்கும். கமிஷன், லஞ்சம் என்று. கொழிப்பார்கள். என்றால். நிர்வாகிகள். எவ்வளவு. காலம். இவர்கள். செய்யச்சொல்வதை. செய்துகொண்டு. போஸ்டர் ஒட்டி, கோஷம் போடும், தொண்டர்களுக்கும். இவர்களுக்கும். வித்தியாசாமில்லாமல். வேலை. வாங்கினால். எத்தனை. காலம். ஓடும் ?


சமீபத்திய செய்தி