மேலும் செய்திகள்
மத்திய நிதியமைச்சருக்கு பாராட்டு
12-Nov-2025
ஜி.எஸ்.டி., 2.0 சீர்திருத்தங்களை செய்ததற்காக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கோவையில் பாராட்டு விழா நடந்தது. இதில், புதுச்சேரி, கேரள வியாபாரிகள் சங்க தலைவர்களும் பங்கேற்றனர். கேரள வியாபார விவசாய ஏகோபன சமிதி தலைவர் ராஜு அப்சரா பேசும்போது, 'கேரளாவில் இப்போது பா.ஜ., குறைவான பலத்தில் தான் உள்ளது. ஆனால், ஜி.எஸ்.டி., சீர்திருத்தத்தால் பலனடைந்த மக்கள், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பெரும் மரியாதை வைத்திருக்கின்றனர். கேரளாவின் முதல்வராக அவரை தேர்வு செய்யும் அளவுக்கு, அங்கு அவர் பிரசித்தி பெற்றிருக்கிறார்' என, புகழ்ந்து தள்ளினார். கீழே இருந்த பா.ஜ., நிர்வாகி ஒருவர், 'கேரள முதல்வராவார்னு பேசி மொத்த கைதட்டலையும் வாங்கிட்டு போயிட்டாரே... நமக்கு இது தோணாம போயிடுச்சே...' என முணுமுணுக்க, சக நிர்வாகிகள் சிரித்தனர்.
12-Nov-2025