மேலும் செய்திகள்
கோவையில் 'அண்ணா', விஜய் கட்சியை 'மரண கலாய்!'
03-Dec-2024
லஞ்சம் வாங்க தனியறை... 'வெளங்குமா' கனிமவளத்துறை!
26-Nov-2024
திருப்பூர், நொச்சிபாளையம், ராஜப்பன் லீலா கன்வென்ஷன் ஹாலில், 'பெண்கள் வீட்டின் கண்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.இதில் பங்கேற்ற திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில், 'ஒரே வீட்டுக்குள்ளேயே, ஆளுக்கொரு மொபைல் போனை கையில் வைத்துக் கொண்டு, யாரும் யாருடனும் பேசுவதில்லை. இப்பல்லாம், பக்கத்து வீடு துாரத்து வீடாகி விட்டது. குடும்பம் நல்லா இருக்கணும், நாம நல்லா இருக்கணும்னு, முன்பெல்லாம் வீடுகளில், செவ்வாய், வெள்ளி விரதம் இருப்பர்.'அதுபோல் இப்போது, 'டிஜிட்டல் பாஸ்ட்டிங்' இருக்க வேண்டியது கட்டாயமாகிறது. குடும்பம் நல்லா இருக்கணும், நாம நல்லா இருக்கணும்னா, வாரத்துக்கு ஒரு நாளாவது மொபைல் போனை தள்ளி வைக்க வேண்டும்' என்றார்.முன் வரிசையில் அமர்ந்திருந்தவர், 'மொபைல் போன்மட்டுமில்லீங்க, 'டிவி' சீரியல்களையும் கொஞ்சம் தள்ளி வச்சா தான் குடும்பம் உருப்படுமுங்க' என, தன் ஆதங்கத்தை முணுமுணுத்தார்.
03-Dec-2024
26-Nov-2024