உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / நாமும் மாப்பிள்ளையை நிறுத்துவோம்!

நாமும் மாப்பிள்ளையை நிறுத்துவோம்!

சேலம் மாவட்டம், வீரபாண்டி சட்டசபை தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜமுத்து. இத்தொகுதிக்கு உட்பட்ட நிலவாரப்பட்டி ஊராட்சி, ராஜமுத்துவின் மாமனார் ஊர். சமீபத்தில் இங்கு, தி.மு.க., 'பூத்' கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில், சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார் பேசுகையில், 'இப்பகுதியில் நம் கட்சி நன்றாக உள்ளது; ஆனாலும், கடந்த சட்டசபை தேர்தலில் ஓட்டுகள் குறைந்தன. சொந்தக்காரங்க வந்தாங்கன்னு ஓட்டு போடுறீங்க... இந்த எம்.எல்.ஏ., உங்க ஊருக்கு என்ன செஞ்சாரு? மக்களுக்கு தேவையானதை நாங்கதானே செய்கிறோம்' என்றார்.இதைக் கேட்ட தொண்டர் ஒருவர், 'நம்ம ஊர்க்காரங்க பாசக்காரங்க... நம்ம ஊர் மாப்பிள்ளைன்னு, அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஓட்டு போட்டுட்டாங்க... நாமளும் இந்த தொகுதியில் பெண் எடுத்தவரா பார்த்து நிறுத்தி பார்ப்போமா...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
மே 17, 2025 03:45

பெரிய இடத்து மாப்பிள்ளை கூடப் பதவி எதுவும் இல்லாமல் சூத்திரதாரியாக இருந்து ஆட்சி செய்கிறாரே, அதுபோல உள்ளூர் மாப்பிள்ளைகளையோ, பெண்களையோ நிறுத்திவிட்டு ‘மாப்பிள்ளை ஆட்சி’ செய்யலாமே? ஏன், இந்திரா காந்தி கூட, ‘ நான் குஜராத்தின் மருமகள்’ என்று உறவு கூறிக்கொண்டு பிரசாரம் செய்யவில்லையா?


சமீபத்திய செய்தி