உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  அவங்களுக்கு என்ன தெரியும்?

 அவங்களுக்கு என்ன தெரியும்?

தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதியின், இரட்டை அர்த்த பேச்சைக் கண்டித்து, சென்னை, திருவொற்றியூர் த.வெ.க., - எம்.எல்.ஏ., செந்தில்குமார் தலைமையில், திருவொற்றியூர் - தேரடி சந்திப்பில், சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 60க்கும் மேற்பட்ட த.வெ.க.,வினர் பங்கேற்றனர். அப்போது, ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்றாற்போல் நிற்காமல், எம்.எல்.ஏ.,வை சூழ்ந்து கொண்டும், திருவொற்றியூர் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியை மறைத்த படியும் நின்று, முன்னும் பின்னுமாக கண்டன கோஷங்கள் எழுப்பினர். பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த போலீஸ்காரர் ஒருவர், 'இவங்க ஆர்ப்பாட்டம் பண்றாங்களா அல்லது மறியல் பண்றாங்களா?' என, குழப்பமாக கேட்டார். அருகில் நின்றிருந்த நிருபர் ஒருவர், 'அது சரி... முன்ன பின்ன ஆர்ப்பாட்டம், போராட்டம் எல்லாம் பண்ணியிருந்தால் தானே அவங்களுக்கு தெரியும்...' என, 'கமென்ட்' அடிக்க, சுற்றியிருந்தோர் பலமாக சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி