உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / ஊராட்சி செயலர் எதற்கு?

ஊராட்சி செயலர் எதற்கு?

சேலம் மாவட்டம், இடைப்பாடி ஒன்றியம், பக்கநாடு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.இதில், ஊராட்சி செயலர் மாரியப்பன் பேசும்போது, 'நீங்கள் கொடுத்த மனுக்கள் என்னிடம் வந்துள்ளன. அதிகாரிகளிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சி தலைவர், வார்டு கவுன்சிலர்கள் பதவி ஜன., 5ல் முடிந்து, தனி அலுவலர் நிர்வாகம் செய்து வருகிறார். ஆயினும், நீங்கள் முன்னாள் தலைவர், முன்னாள் கவுன்சிலர்களை பார்த்து உங்கள் குறைகளை சொல்லுங்கள். அவர்கள் என்னிடம் சொன்னால், அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படும்' என்றார்.அப்போது ஒரு பெண், 'இவ்வளவு நாளா தலைவர், கவுன்சிலர்களிடம் மனு கொடுத்தும், ஒண்ணும் நடக்கலையே... பதவியில் இருந்தப்பவே கண்டுக்காதவங்க, இனி நம்மை எப்படி மதிப்பாங்க... அவங்களிடம் போய் சொல்லுங்கன்னா, ஊராட்சி செயலர் எதுக்கு இருக்காரு...?' என முணுமுணுக்க, அருகில் இருந்த பெண்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
பிப் 05, 2025 06:16

பந்தை லாவகமாக கைமாற்றிவிட்டு மாஜி கவுன்சிலர்களைக் கோர்த்து தப்பிக்கும் யுக்திதான் இது என்று அவர்களுக்குத் தெரியாதா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை