வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அவர்களுக்கு ‘வர வேண்டியது’ தாமதித்தால், இன்னும் பத்து கூட்டத்திலும் இதே customized பதிலைத்தான் சொல்வார்கள்
சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலக்குழு கூட்டம், தி.மு.க.,வைச் சேர்ந்த மண்டலக்குழு தலைவர் தனியரசு தலைமையில் நடந்தது. இதில், கவுன்சிலர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.அதற்கு அதிகாரிகள், 'இரு தினங்களில் செய்வோம்; உடனடியாக கவனிக்கிறோம்' என, பதிலளித்தனர். இதைக் கண்டித்த மண்டலக்குழு தலைவர், 'கடந்த மீட்டிங்கில் கேட்ட கேள்விக்கு இன்றுவரை நடவடிக்கை எடுக்காவிட்டால் எப்படி? அடுத்த மீட்டிங்கில், இந்த முறை கவுன்சிலர்கள் கேட்ட கேள்வி, மீண்டும் வராத அளவிற்கு செயல்பட வேண்டும்' என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மூத்த நிருபர் ஒருவர், 'ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், அமைச்சர்களை ஈசியா டீல் பண்ற அதிகாரிகளுக்கு, கவுன்சிலர்களை எப்படி சமாளிக்கணும்னு தெரியாதா என்ன...?' என முணுமுணுக்க, மற்றவர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.
அவர்களுக்கு ‘வர வேண்டியது’ தாமதித்தால், இன்னும் பத்து கூட்டத்திலும் இதே customized பதிலைத்தான் சொல்வார்கள்