உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  கர்நாடகா தண்ணீர் திறந்துடுமா?

 கர்நாடகா தண்ணீர் திறந்துடுமா?

இந்திய கம்யூ., கட்சியின் மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் முத்தரசன், சமீபத்தில் திருச்சியில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 'காவிரி நதிநீர் பிரச்னையில் நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் என எந்த தீர்ப்பையும் மதிக்க மாட்டோம், என்று கர்நாடக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 'தேசியக் கட்சியான காங்கிரஸ் ஆட்சி செய்யும், கர்நாடக அரசின் பொறுப்பற்ற பதில் கவலை அளிக்கிறது. காவிரி விவகாரத்தில், கர்நாடகாவில் அனைத்து கட்சிகளும் ஒரே குரலாக ஒலிப்பதை போல், தமிழகத்திலும் ஒருமித்த கருத்தை உருவாக்க, அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை, தமிழக அரசு கூட்ட வேண்டும்' என்றார். இதைக் கேட்ட நிருபர் ஒருவர், 'அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானம் போட்டுட்டா மட்டும், கர்நாடகா தண்ணீர் திறந்து விட்டுருமா என்ன?' என முணு முணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Lakshminarasimhan
ஆக 16, 2026 13:51

இந்த கம்யூனிஸ்ட் பயலுக தான் தமிழ் நாட்டில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு முட்டு கொடுத்திட்டு பிரகள காங்கிரஸ் எதிர்ப்பு என்கிற போர்வையில் இப்படி நாடகம் ஆடுது இந்த வீணா போன கம்யூனிஸ்ட்


panneer selvam
ஆக 16, 2026 12:35

It is the usual Cauvery drama we have seen during rain deficit time by Dravidians . No Tamilnadu politicians have the guts to fight against Karnataka Government or even raise the problem vociferously in Supreme court to implement Cauvery Tribunal Orders.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை