உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / எல்லாத்தையும் போடுவாங்களா?

எல்லாத்தையும் போடுவாங்களா?

சென்னை, மணலி - மாத்துாரில், பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாள், வடசென்னை மேற்கு மாவட்ட பா.ஜ., பொதுச்செயலர் குமரனின், 53வது பிறந்தநாள், ஏ.கே.ஆர்., அறக்கட்டளை ஒன்பதாம் ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்று, 1,150 பேருக்கு தலா, 500 ரூபாய், 5 கிலோ அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின், செய்தியாளர்களுக்கு அண்ணாமலை பேட்டிஅளித்தார். அப்போது, கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் நீண்ட நெடிய விளக்கமளித்து கொண்டிருந்தார். அரை மணி நேரத்திற்கும் மேலாக பேட்டி நீடித்தது. இதை பார்த்த பா.ஜ., நிர்வாகி ஒருவர், 'இத்தனை கேள்விகள் கேட்டாலும், அண்ணன் சளைக்காம பதில் தர்றாரே...' எனக்கூற, சக நிர்வாகியோ, 'ஆனா, எல்லாத்தையும் நாளைக்கு பேப்பர்ல போடுவாங்களா என்ன...?' என்றபடியே, அங்கிருந்து நகர்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
செப் 24, 2025 18:56

‘ கூட்டம் முடிந்ததும் நிருபர்களை சந்தித்தார்’ என்று ஒரே வரியில் முடித்து விடுவார்கள் இதற்குமேல் அவருக்கு மதிப்புக் கொடுப்பதை சொந்தக் கட்சியினரே ரசிக்க மாட்டார்களே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை