உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  புறாவை பறக்க விடுவாங்களா?

 புறாவை பறக்க விடுவாங்களா?

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், தன் ஆதரவாளர்களுடன், தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் வைத்திலிங்கம் பேசுகையில், 'இன்றைக்கு திராவிடத்தை கண்டால், சிலர் மனவேதனை அடைகின்றனர். யாரும் இந்த திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது. நமது முதல்வர் எதற்கும் துணிந்து, தன்னுடைய உயிர் திராவிடம் தான் என வாழ்ந்து வருகிறார். சிபி சக்கரவர்த்தி மடியில் விழுந்த புறா போல், நானும் முதல்வர் மடியில் விழுந்து விட்டேன்' என்றார். இதை கேட்ட, தி.மு.க., தொண்டர் ஒருவர், 'இந்த புறாவையாவது சுதந்திரமா பறக்க விடுவாங்களா... அல்லது நம்ம கட்சியின், 'டெல்டா' மாவட்ட தளபதிகளின் கூண்டுக்குள்ளேயே அடைச்சிடுவாங்களான்னு தெரியலையே...' என, முணுமுணுக்க, சக தொண்டர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

கல்யாணராமன் மறைமலை நகர்
பிப் 02, 2026 07:02

அந்த சிபி சக்கரவர்த்தி புறாவிற்காகத் தன் சதையை அறுத்துக் கொடுத்துக் காப்பாற்றினார். ஆனால், இந்த சிபி சக்கரவர்த்தியின் தந்தை முதல் இவர் குடும்பமே தொண்டனிடம் இருந்து பிடுங்கியே பழக்கப்பட்டவர்கள். இது வைத்திக்கு தெரியாதா?


D.Ambujavalli
பிப் 02, 2026 06:30

நன்றிக்கடனாகத்தான் கோடிகளை வீசியெறிந்து மாநாடு நடத்தி முதல்வரின் good books இல் வந்துவிட்டாரே ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை